ADDED : ஆக 10, 2025 12:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு, தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, தரிசனம் செய்து செல்கின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில், காலை 6:00 மணி முதல், இரவு 8:45 மணி வரை, தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஆவணி அவிட்டத்தையொட்டி, மதியம் 12:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை, மூன்றரை மணி நேரம் கோவில் நடை சாத்தப்பட்டது.
அந்த நேரத்தில், கோவில் குருக்கள் பூணுால் மாற்றியும், சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டனர். தொடர்ந்து, மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின், பக்தர்கள் மூலவரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.