UPDATED : ஜூலை 18, 2026 05:10 PM
ADDED : ஜூலை 18, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூர் காலனியைச் சேர்ந்த, 22 வயது பெண், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள கழிப்பறைக்கு சென்றார். அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர், மொபைல் போனுடன் கழிப்பறை அருகே சென்றுள்ளார். அப்போது, அப்பெண் திடீரென வெளியே வந்ததும், சதீஷ்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதுகுறித்து கேட்பதற்காக, அப்பெண் மற்றும் அவரது தாய், சகோதரி மூவரும், சதீஷ்குமார் வீட்டிற்கு சென்றனர். அப்போது, சதீஷ்குமார் மற்றும் அவரது தாய் சுமதி, தந்தை சுப்ரமணி ஆகியோர், மூன்று பெண்களையும் தாக்கினர். புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து, மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
