தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ கோவில் பூசாரியை தாக்கிய மூன்று பேர் பிடிபட்டனர்

கோவில் பூசாரியை தாக்கிய மூன்று பேர் பிடிபட்டனர்

கோவில் பூசாரியை தாக்கிய மூன்று பேர் பிடிபட்டனர்


ADDED : செப் 10, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2026 08:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி அருந்ததி காலனியைச் சேர்ந்தவர் சுதாகர், 45. இவர், திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகையில் உள்ள மாத்தம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு, வி.கே.என். கண்டிகையில் இருந்து திருத்தணி அருந்ததி காலனிக்கு சுதாகர் சென்று கொண்டிருந்தார். அப்போது, அருந்ததி காலனி கோவில் அருகே, அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவர் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அங்கிருந்த சேகரின் ஆதரவாளர்களான கிஷோர், 20, வம்சி, 22 மற்றும் நாகராஜ், 44, ஆகியோர், உருட்டு கட்டை மற்றும் இரும்பு கம்பியால், சுகாதகரை தாக்கினர். இதை தடுக்க வந்த சுதாகர் சகோதரர் மனோகரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த சகோதரர்களை, அப்பகுதியின் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us