ADDED : ஜூன் 04, 2026 09:15 AM
பொதட்டூர்பேட்டை:முன் விரோதம் காரணமாக நடந்த தகராறில், சமரசம் செய்ய வந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பொதட்டூர்பேட்டை அடுத்த சாமந்தவாடா கிராமத்தை சேர்ந்தவர் சேகர், 55. இவர், அதே கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவருடன், நேற்று தகராறில் ஈடுபட்டார்.
சேகருடன், அவரது மகன் ஆகாஷ், 22, மற்றும் அவரது மனைவி சசிரேகா, 42, ஆகியோரும், தகராறின் போது இருந்தனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி லதா, 45, என்பவர், அவர்களை சமரசம் செய்ய முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த சேகர், சசிரேகா, ஆகாஷ் ஆகியோர், லதாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த லதா, பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சேகர், சசிரேகா, ஆகாஷ் ஆகியோரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
