ADDED : நவ 26, 2024 08:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே அரும்பாக்கம் சந்திப்பில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர்.
அப்போது, சந்தேகம் ஏற்படும்படி கையில் பையுடன் வந்த மூவரை விசாரித்தனர். அவர்களை சோதனயிட்டபோது, 1,900 கிராம் கஞ்சா சிக்கியது.
அவர்கள் ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தை சேர்ந்த முனிசேகர், 22, திருப்பதி மாவட்டத்தை சேர்ந்த மோகன்தாஸ், 24, பாலாஜி, 24 ஆவர். வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

