/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
காதல் திருமண விவகாரம் சிறுவனை கடத்திய மூவர் கைது
/
காதல் திருமண விவகாரம் சிறுவனை கடத்திய மூவர் கைது
ADDED : ஜூன் 09, 2025 11:47 PM
திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி, 44. இவரது மகன் தனுஷ், 23. இவர் ஏப்.,15ம் தேதி தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ, 21 என்பவரை காதலித்து சென்னையில் பதிவு திருமணம் செய்துள்ளார்.
இதையடுத்து விஜயஸ்ரீயின் பெற்றோர் தனுஷ் குடும்பத்திற்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 6ம் தேதி நள்ளிரவு, 12:00 மணியளவில் தேனியில் இருந்து டொயோட்டா ஹர்பன் குரூசர் ஹைடர், ஹூண்டாய் ஐ20 மற்றும் ஒரு கார் என மூன்று கார்களில் வந்த மர்மநபர்கள் லட்சுமியின் வீடு புகுந்து தனுஷின் 17 வயதுடைய தம்பியை கடத்தி சென்றனர்.
இதுகுறித்து லட்சுமி காவல் உதவி எண்ணான 100க்கு தகவல் தெரிவித்து ஆன்லைன் வாயிலாகவும் புகார் அளித்ததார். இதையடுத்து அன்று அதிகாலை, 2:00 மணியளவில் சிறுவனை கடத்தி சென்றவர்களே காரில் அழைத்து வந்து இறக்கி விட்டு சென்றனர்.
திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து, சிறுவனை காரில் கடத்திய தேனியை சேர்ந்த வனராஜா, 55 மணிகண்டன், 46 கணேசன், 47 மூவரை கைது செய்தனர்.
இரண்டு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, 'சிறுவனை கடத்தியவர்களிடம் விசாரித்து வருகிறோம். விசாரணைக்கு பின் முழு தகவல் தெரியவரும்' என்றனர்.