தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/கஞ்சா கடத்திய மூவர் கைது

கஞ்சா கடத்திய மூவர் கைது

கஞ்சா கடத்திய மூவர் கைது


ADDED : மார் 03, 2024 01:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 01:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை:ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்த இருப்பதாக, பெரியபாளையம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தமிழக -- ஆந்திர எல்லையில், ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அவ்வழியே வந்த இரண்டு பைக்குகளை சோதனை செய்தனர். அதில் 2.4 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.

பைக்கில் வந்த, பொன்னேரி தாலுகா, சோம்பட்டை சேர்ந்த அபிமன்யூ, 22, கீழ்மேனியை சேர்ந்த சரத், 20, மற்றும் மதன்நாத், 42 ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us