ADDED : ஆக 22, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:கஞ்சா கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக - ஆந்திர எல்லையில் கஞ்சா கடத்துவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. பெரியபாளையம் மதுவிலக்கு போலீசார், ஊத்துக்கோட்டை பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியே வந்த மூன்று பேரை விசாரித்தனர்.
அவர்கள் சித்துார் மாவட்டம், சம்சூர்பகதுார்பேட்டை சஞ்சய், 22, அருண்ஜோதி, 29, ஊத்துக்கோட்டை அண்ணாநகர், சூர்யா, 21, என்பது தெரிந்தது. அவர்களிடம் இருந்து, 350 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு, 3,500 ரூபாயாகும். போலீசார், அவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

