ADDED : மே 28, 2026 06:40 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பேருந்தில், 8 கிலோ கஞ்சா கடத்திய மூவரை, போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று வாகன சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்தை நிறுத்தி, பயணியரின் உடைமைகளை சோதனை செய்தனர்.
அப்போது, அதில் பயணித்த ஈரோடு பகுதியை சேர்ந்த அபிஷேக், 25, ஒடிஷா மாநிலத்தை சேர்ந்த சரோஜ் பீஹார், 25, மகேந்திர குரில்லா, 24, ஆகியோரிடம், 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
