ADDED : பிப் 24, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே காரில், 90 கிலோ குட்கா கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள மாநில எல்லையோர சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், கடத்தப்பட்ட, 90 கிலோ எடை குட்கா பண்டல்களை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதை ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கடத்திய, கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன், 42, சதீஷ், 33, ராஜேஷ், 34, ஆகிய மூவரை கைது செய்தனர்.
