/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கத்தி முனையில் வழிபறி மூன்று பேர் கைது
/
கத்தி முனையில் வழிபறி மூன்று பேர் கைது
ADDED : அக் 26, 2024 07:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் முத்துபெருமாள், 22. லாரி டிரைவர். நேற்று முன்தினம் இரவு, கவரைப்பேட்டை அடுத்த பெருவாயல் பகுதியில், லாரியில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போது, பல்சர் பைக்கில் வந்த மூவர், கத்தி முனையில் முத்துபெருமாளை மிரட்டி, 15,500 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர்.
வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார், வழிபறியில் ஈடுபட்ட, கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்த சுனில், 22, மோசஸ், 32, பத்மநாபன், 22, ஆகிய மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.