/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டர் சட்டத்தில் மூன்றுபேர் கைது
/
குண்டர் சட்டத்தில் மூன்றுபேர் கைது
ADDED : ஏப் 03, 2025 07:35 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் முத்துக்கொண்டாபுரத்தை சேர்ந்த மாஜி ராணுவ வீரர் வெங்கடேசனை கொலை செய்த வழக்கில் திருவாலங்காடு அடுத்த பகவதிபட்டாபிராமபுரத்தை சேர்ந்தவர் சதீஷ், 30 மற்றும் சென்னை அடுத்த சித்தாலபாக்கத்தை சேர்ந்த யோகேஸ்வரன், 22, பெரும்பாக்கத்தை சேர்ந்த ஸ்ரீராம் 21 உள்ளிட்ட மூவர் இரு மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மூவர் மீதும் சென்னை, திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய திருவள்ளூர் எஸ்.பி., சீனிவாச பெருமாள், கலெக்டர் பிரதாபிற்கு பரிந்துரை செய்தார். நேற்று மூவரையும் குண்டர் தடுப்பு காவலில் வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

