/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழைய குற்றவாளி மூன்று பேர் கைது
/
பழைய குற்றவாளி மூன்று பேர் கைது
ADDED : பிப் 19, 2026 05:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளவேடு: வெள்ளவேடு பகுதியில் பழைய குற்றவாளிகள் மூவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
வெள்ளவேடு போலீசார், பஜார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணி மேற்கொண்டனர்.
அப்போது, சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், வெள்ளவேடைச் சேர்ந்தவர் செல்லப்பு என்ற இளமுருகன், 22, திருமழிசை காவல்சேரியைச் சேர்ந்த ஆகா என்ற ஆகாஷ், 30, ஜெகன், 27, ஆகியோர் என தெரியவந்தது.
இவர்கள் மீது வெள்ளவேடு காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வெள்ளவேடு போலீசார் மூவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

