/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இருசக்கர வாகனம் மீது கார் மோதி மூவர் காயம்
/
இருசக்கர வாகனம் மீது கார் மோதி மூவர் காயம்
ADDED : பிப் 15, 2024 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதட்டூர்பேட்டை:பொதட்டூர்பேட்டை காவல் எல்லைக்கு உட்பட்ட துவாரகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வரதப்பன், 57, இவர் நேற்று முன்தினம் மாலை இவரது 'பஜாஜ் சிடி100' இருசக்கர வாகனத்தில் அவரது மகன் முனிரத்தினம், 37, மற்றும் அவரது இரண்டு வயது பேரனுடன், அத்திமாஞ்சேரிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது நொச்சிலி சாலையில் எதிரே வந்து கொண்டிருந்த 'போர்டு' கார், இவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், துாக்கி வீசப்பட்ட மூன்று பேரும் காயம் அடைந்தனர். அத்திமாஞ்சேரிப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.