/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கார் - பைக் மோதல் மூவர் படுகாயம்
/
கார் - பைக் மோதல் மூவர் படுகாயம்
ADDED : ஆக 10, 2025 10:26 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது மாருதி கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு, 42. இவர் நேற்று முன்தினம் மதியம் தனது பேஷன் புரோ இருசக்கர வாகனத்தில் மனைவி திவ்யா, 36 மற்றும் மகனுடன் திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது ஐ.சி.எம்.ஆர்., அருகே வந்த போது பின்னால் வந்த மாருதி வேகன் கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த மூவரும் திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.