/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதையில் வாலிபரை வெட்டிய ரவுடி உட்பட மூவருக்கு சிறை
/
போதையில் வாலிபரை வெட்டிய ரவுடி உட்பட மூவருக்கு சிறை
போதையில் வாலிபரை வெட்டிய ரவுடி உட்பட மூவருக்கு சிறை
போதையில் வாலிபரை வெட்டிய ரவுடி உட்பட மூவருக்கு சிறை
ADDED : பிப் 16, 2024 07:33 PM

திருவள்ளூர்:வெள்ளவேடு அடுத்த குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன், 48. இவர் நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த மூன்று நபர்கள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதுகுறித்து தியாகராஜன் கொடுத்த புகாரில், வெள்ளவேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் தியாகராஜனை கத்தியால் தாக்கியவர்கள் ஆவடி ஆயில்சேரி பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி இரட்டைமலை சீனிவாசன், 24 மற்றும் கூட்டாளிகளான சிங்கம் சந்துரு, 20 , சாரதி,19 என தெரிந்தது. மூவரும் ஆவடி பகுதியில் வடமாநில வாலிபர் ஒருவரிடம் நான்கு மொபைல்போன் மற்றும் வெல்டிங், கட்டிங் இயந்திரங்களை பறித்துச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் மொபைல்போன் மூலம் ஆய்வு செய்ததில், ஆவடி ஆயில்சேரி பகுதியில் பதுங்கியிருந்த மூவரையும் நேற்று கைது செய்த வெள்ளவேடு போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
இதில் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்ததில், ரவுடி சீனிவாசனுக்கு வலது கால், சிங்கம் சந்துருவுக்கு இடது கால் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.