ADDED : மார் 09, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: மது அருந்த பணம் கேட்டு, கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரியபாளையம் அடுத்த ராள்ளபாடி சுடுகாட்டை ஒட்டி, மூன்று பேர் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதாக, பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார், கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருந்த மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில், பொன்னேரியைச் சேர்ந்த கிஷோர், 27, புழலைச் சேர்ந்த நிதில்குமார், 27, பெரியபாளையத்தைச் சேர்ந்த தினேஷ், 29, என்றும், மது அருந்த பணம் கேட்டு, பொதுமக்களை மிரட்டியதும் தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்த பெரியபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
