தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாணவியை மிரட்டியவர் கைது: உடன் வந்த மூவருக்கு வலை

மாணவியை மிரட்டியவர் கைது: உடன் வந்த மூவருக்கு வலை

மாணவியை மிரட்டியவர் கைது: உடன் வந்த மூவருக்கு வலை


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 08:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 08:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணியில், பள்ளி மாணவியை மிரட்டிய வழக்கில், ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மூவரை தேடி வருகின்றனர்.

திருத்தணி பகுதியைச் சேர்ந்த, 17 வயது மாணவி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு படித்து வருகிறார். சில மாதங்களாக, அந்த மாணவி, தாழவேடு பகுதியைச் சேர்ந்த விஷ்ணு, 25, என்ற வாலிபரிடம் பேசி வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த, பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த லாரன்ஸ் 31, அவரது சகோதரர் சுசில், 27, சுசிலின் மனைவி ரோஸி, 25, உள்ளிட்டோருடன் சேர்ந்து, கடந்த வாரம் பெரியார் நகர் கல் குவாரி அருகே விஷ்ணுவை தாக்கியுள்ளனர்.

பின், மாணவியை சந்தித்த நான்கு பேரும், ஆபாசமான வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மாணவியின் தாய் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், நேற்று லாரன்ஸை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us