/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குட்கா கடத்திய வழக்கு மேலும் மூவர் கைது
/
குட்கா கடத்திய வழக்கு மேலும் மூவர் கைது
ADDED : ஜன 23, 2025 08:57 PM
திருவாலங்காடு:திருத்தணி, நேரு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 32; இவர்; நேற்று முன்தினம், ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரிடம் இருந்து குட்கா பொருட்களை வாங்கிக் கொண்டு திருவள்ளூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய, 'ஹோண்டா மொபிலியோ' காரில் கடத்தி வந்தார்.
திருவாலங்காடு போலீசார் அவரை, மோசூர் அருகே துரத்தி பிடித்து கைது செய்து, 237 கிலோ ஹான்ஸ், குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, பாலாஜியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குட்கா கடத்தல் மற்றும் விற்பனையில் தொடர்புடைய திருத்தணியைச் சேர்ந்த விமலா, 30, மற்றும் சென்னையைச் சேர்ந்த ஜெபஸ்டின், 42, என்பவரை கைது செய்து அவரிடமிருந்து, 108 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். பின், நகரியை சேர்ந்த சுந்தரேசனையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

