ADDED : மார் 03, 2024 12:16 AM
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், திருவள்ளூர் பகுதியில் உள்ள கல்லுாரியில் படித்து வருகிறார். கடந்த, 28ம் தேதி கல்லுாரிக்கு சென்ற மாணவி, பின் வீடு திரும்பவில்லை.
அவரது பெற்றோர் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், வழக்கு பதிந்து காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.
l மப்பேடு அடுத்த எறயாமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகள் தர்ஷிணி, 20. இவர், கடந்த, 29ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. தந்தை மணி கொடுத்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார், வழக்கு பதிந்து காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.
l மப்பேடு அடுத்த நரசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவி, 68. இவர், பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த, 28ம் தேதி வேலைக்குச் சென்றவர் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது மகன் பத்மபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போனவரை தேடி வருகின்றனர்.
