/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பைக் - வேன் மோதல் மூன்று பேர் படுகாயம்
/
பைக் - வேன் மோதல் மூன்று பேர் படுகாயம்
ADDED : மார் 29, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த கனகவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏசுபாதம் மகன் ஆப்ரகாம், 49. தந்தைக்கு உடல்நிலை சரியில்லாததால், 'ஹீரோ ஹோண்டா' இருசக்கர வாகனத்தில், நண்பர் வேலு என்பவருடன், நேற்று முன்தினம் பட்டரைபெரும்புதுார் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த வேன் மோதியது. இதில், மூவரும் பலத்த காயமடைந்து, சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.