/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து மூன்று மின் கம்பங்கள் சேதம்
/
சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து மூன்று மின் கம்பங்கள் சேதம்
சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து மூன்று மின் கம்பங்கள் சேதம்
சாலையோரம் இருந்த மரம் சாய்ந்து மூன்று மின் கம்பங்கள் சேதம்
ADDED : ஜூலை 10, 2025 02:42 AM

திருத்தணி:திருத்தணியில் சாலையோரம் இருந்த மரம் சாய்ந்ததால், அப்பகுதியில் மூன்று மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.
திருத்தணி பழைய சென்னை சாலையில், மின்வாரிய துணை மின்நிலையம், மின்வாரிய பொறியாளர் அலுவலகம், நெடுஞ்சாலை துறை சுற்றுலா மாளிகை மற்றும், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு லேசான காற்றுடன் அரைமணி நேரம் மழை பெய்தது.
காற்றில் பழைய சென்னை சாலையோரம் இருந்த  மரம் சாய்ந்து மின் ஒயர்கள் மற்றும் மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மூன்று மின் கம்பங்கள் உடைந்து விழுந்தன.
தகவல் அறிந்ததும் மின்வாரிய ஊழியர்கள் சென்று மின்சாரத்தை துண்டித்தனர்.  சாலையில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன ஓட்டிகள் யாரும் செல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
நேற்று காலை, மின்வாரிய ஊழியர்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன், உடைந்த மூன்று மின்கம்பங்களை அகற்றி, அதே இடத்தில் புதிய மின் கம்பங்கள் பொருத்தப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டது.