ADDED : டிச 10, 2024 09:11 PM
திருத்தணி:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா, கீழாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார், 32; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, டி.புதூர் சுடுகாடு அருகே, நண்பர்கள் திருத்தணியைச் சேர்ந்த ஆனந்தன், 29, சுபாஷ், 28, டி.புதுாரைச் சேர்ந்த முருகன், 36, ஆகியோர் ஒன்றாக மதுகுடித்து உள்ளனர்.
அப்போது, குடிபோதையில் வாய் தகராறில், அசோக்குமாரை மேற்கண்ட மூன்று நண்பர்கள் பீர் பாட்டிலால் தலையில் பலமான தாக்கினர். இதில், படுகாயமடைந்த அசோக்குமாரை அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி பெற்று மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அசோக்குமார் அளித்த புகாரையடுத்து, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தன், முருகன் மற்றும் சுபாஷ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
