/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முதியவரை தாக்கிய மூன்று ரவுடிகள் கைது
/
முதியவரை தாக்கிய மூன்று ரவுடிகள் கைது
ADDED : ஆக 13, 2025 11:12 PM

திருவள்ளூர்:முதியவரை தாக்கிய ரவுடிகள் மூன்று பேரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரை சேர்ந்தவர் ரபீக் இஸ்மாயில், 63. இவர் கடந்த 11-ம் தேதி மாலை வீட்டில் இருந்து கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின் தொடர்ந்து, மாருதி ஸ்விப்ட் காரில் வந்த, காக்களூரைச் சேர்ந்த ஷியாம் ராபர்ட், 35, பெரியகுப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆகாஷ், 26 மற்றும் பூங்காநகர் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த பிராங்க்ளின், 24 ஆகிய மூவரும், முன்விரோதம் காரணமாக இஸ்மாயிலை வழிமறித்து ஆபாசமாக பேசி தாக்கியுள்ளனர். மேலும், அவர் வைத்திருந்த 1,015 ரூபாயை பறித்தனர். அப்போது, அவரை ஷியாம் ராபர்ட் கத்தியால் வெட்ட முயன்றபோது, இஸ்மாயில் கூச்சலிட்டார். இதையடுத்து மூவரும் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர்.
இது குறித்து ரபீக் இஸ்மாயில் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். ரபீக் இஸ்மாயில் மீது தாக்குதல் நடத்தி தப்பியோடிய மூவரும், பழைய ரவுடிகள் என, தெரிந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.