தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ டயர் வெடித்து விபத்து தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி

டயர் வெடித்து விபத்து தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி

டயர் வெடித்து விபத்து தீப்பற்றி எரிந்த டிப்பர் லாரி


ADDED : ஆக 22, 2026 06:14 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 22, 2026 06:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி: திருத்தணி அருகே, நேற்று அதிகாலை டயர் வெடித்து விபத்திற்குள்ளான டிப்பர் லாரி, திடீரென தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அதன் ஓட்டுநர் காயங்களின் உயிர் தப்பினார்.

மாதவரத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 30. இவர், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மாதவரத்தில் இருந்து திருத்தணி அடுத்த வி.கே.என்.கண்டிகை பகுதியில் இயங்கி வரும் கல் குவாரிக்கு, டிப்பர் லாரியை ஓட்டி வந்தார்.

திருத்தணி காசிநாதபுரம் கூட்டுச்சாலை அருகே வந்தபோது, லாரியின் பின்பக்க டயர் ஒன்று திடீரென வெடித்து, கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஓட்டுநர் திடீரென ‘பிரேக்’ போட்ட போது ஏற்பட்ட உராய்வால், தீப்பிடித்து எரிய தொடங்கியது.

சுதாரித்த ஓட்டுநர் ஸ்ரீதர், லாரியில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் லாரியின் பின்புறம் முழுதும் எரிந்து நாசமானது.

விபத்து குறித்து, திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us