/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசை சாலை படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் மவுனம்
/
திருமழிசை சாலை படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் மவுனம்
திருமழிசை சாலை படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் மவுனம்
திருமழிசை சாலை படுமோசம் பேரூராட்சி நிர்வாகம் மவுனம்
ADDED : அக் 04, 2024 11:48 PM

திருவள்ளூர்:திருமழிசை பேரூராட்சியில் 15 வார்டுகளில் 130க்கும் மேற்பட்ட தெருக்களில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 18,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள 15 வார்டுகளில் உள்ள பல பகுதிகளில் தெரு சாலைகளில் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது. குறிப்பாக, பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலை மற்றும் ஜவகர் தெரு உட்பட பல இடங்களில் கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளன.
பேரூராட்சி அலுவலகம் சேற்றில் சிக்கியுள்ளதால், குடியிருப்புவாசிகள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பணியாளர்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
பேரூராட்சி அலுவலகம் செல்லும் சாலையே மோசமாக உள்ளது, பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேரூராட்சியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.