/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
/
திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
ADDED : ஜூலை 12, 2025 01:04 AM

திருத்தணி:திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் திறந்து வைத்தார்.
திருத்தணி அரசு மருத்துவமனையை, கடந்த, 2022 ம் ஆண்டு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகத்தில், 45 கோடி ரூபாய் மதிப்பில்,5 அடுக்கு கட்டடம் நான்கு மாதங்களுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம், 18 ம் தேதி பொன்னேரியில் நடந்த அரசு நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திருத்தணி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இருப்பினும் மின்சாரம் மற்றும் சிறு, சிறு கட்டட பராமரிப்பு பணிகள் இருந்ததால் நோயாளிகள் பயன்பாட்டிற்கு விடாமல் பழைய கட்டடத்திலேயே இயங்கி வந்தது.
இந்நிலையில் அரசு தலைமை மருத்துவமனையில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்ததால் நேற்று நோயாளிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் அம்பிகா தலைமையில் நடந்தது.
இதில், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைத்தார்.
பழைய அரசு மருத்துவமனை அவரச சிகிச்சை பிரிவு நோயாளிகள், ஆய்வகம், மருந்தகம் போன்ற பல்வேறு பிரிவுகள் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டடத்திற்கு மாற்றப்பட்டன.