/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரே நாளில் 50 பேனர்கள் அகற்றம் திருத்தணி நகராட்சி நிர்வாகம் அதிரடி
/
ஒரே நாளில் 50 பேனர்கள் அகற்றம் திருத்தணி நகராட்சி நிர்வாகம் அதிரடி
ஒரே நாளில் 50 பேனர்கள் அகற்றம் திருத்தணி நகராட்சி நிர்வாகம் அதிரடி
ஒரே நாளில் 50 பேனர்கள் அகற்றம் திருத்தணி நகராட்சி நிர்வாகம் அதிரடி
ADDED : டிச 19, 2025 06:31 AM

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் நேற்று ஒரே நாளில், 50 விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகளவில் விளம்பர பேனர்கள் சாலையோரம் மற்றும் அரசு அலுவலக பகுதிகளில், அரசியல் கட்சி பிரமுகர்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பிறந்த நாள் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
நேற்று முன்தினம் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், திருவள்ளூரில் அனுமதியின்றி வைத்த பேனர்களை அகற்றியும், பேனர் வைத்தவர்கள் மற்றும் அச்சகம் மீது போலீசார் மூலம் வழக்கு பதிய செய்தார்.
மேலும், கலெக்டர் பிரதாப், பேனர்கள் வைப்பவர்கள் மீது வழக்கு பதியப்படும் எனவும், அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரித்தார். இது தொடர்பான செய்தி, நேற்று படத்துடன் நம் நாளிதழில் வெளியானது.
இதையடுத்து, திருத்தணி நகராட்சியில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட பேனர்களை, நகராட்சி அதிகாரி தயாநிதி தலைமையிலான ஊழியர்கள், டிராக்டர் மூலம் நேற்று ஒரே நாளில் 50 பேனர்களை அகற்றினர்.
மேலும், அரசியல் கட்சி நிர்வாகிகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை 'நோட்டீஸ்' வழங்கினர். 'மீதமுள்ள பேனர்களை அகற்றும் பணி தொடரும்' என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

