/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் பிரச்னையை கண்காணிக்க திருத்தணி பி.டி.ஓ., அறிவுறுத்தல்
/
குடிநீர் பிரச்னையை கண்காணிக்க திருத்தணி பி.டி.ஓ., அறிவுறுத்தல்
குடிநீர் பிரச்னையை கண்காணிக்க திருத்தணி பி.டி.ஓ., அறிவுறுத்தல்
குடிநீர் பிரச்னையை கண்காணிக்க திருத்தணி பி.டி.ஓ., அறிவுறுத்தல்
ADDED : ஏப் 15, 2025 06:44 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், மொத்தம் 27 ஊராட்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலான ஊராட்சிகளில் மோட்டார் பழுது, குழாய் சேதம் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர்கள் முறையாக வினியோகம் செய்யாததால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
தற்போது, கோடை வெயில் துவங்கியுள்ளதால், கிராம வாசிகள் குடிநீருக்காக கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நம் நாளிதழிலும் செய்தி வெளியானது. நேற்று திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், ஊராட்சி செயலர்கள் மற்றும் பம்ப் ஆப்பரேட்டர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பேசியதாவது:
தற்போது வெயில் காலம் என்பதால், கிராமங்களில் அதிகளவில் குடிநீர் தேவைப்படும். ஆகையால், ஊராட்சி செயலர்கள் மற்றும் குடிநீர் வினியோகம் செய்வோர் ஒன்றிணைந்து, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.
மின்மோட்டார் பழுது, குழாய்கள் சேதம் போன்றவற்றை உடனுக்குடன் சீரமைத்து, மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். கோடைக்காலம் முடியும் வரை, ஊராட்சி செயலர்கள் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை வராமல் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

