/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவாலங்காடு ஒன்றிய குழு கூட்டம்
/
திருவாலங்காடு ஒன்றிய குழு கூட்டம்
ADDED : பிப் 23, 2024 07:23 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய சேர்மன் ஜீவா தலைமையில், நேற்று பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் காளியம்மாள் மற்றும் கலைச்செல்வி ஆகியோர் வரவேற்றனர். துணை சேர்மன் சுஜாதா மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பெரியகளக்காட்டூர், காவேரிராஜபுரம், நாபளூர் உட்பட, 15 ஊராட்சிகளில் சேதமடைந்து பயன்பாடின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சமுதாய கூடம், அங்கன்வாடி மையம் உள்ளிட்டவற்றை இடித்து அகற்ற மன்ற ஒப்புதல் கோரப்பட்டது.
மேலும் பொன்பாடி கிராமத்தில், தனியார் தொழிற்சாலைக்கு 10,116 சதுர அடி நிலம் ஒதுக்குவது தொடர்பாக மன்ற ஒப்புதல் கோரப்பட்டது.