/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; தலைகுனிந்த 'சிசிடிவி' சீரமைக்க கோரிக்கை

ADDED : செப் 26, 2024 01:23 AM

தலைகுனிந்த 'சிசிடிவி' சீரமைக்க கோரிக்கை
புழல், கதிர்வேடு சந்திப்பு 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. இதனருகே புழல் சிறைச்சாலை, மாதவரம் பேருந்து நிலையம், கன்டெய்னர் யார்டுகள் உள்ளதால், கனரக வாகன போக்குவரத்துடன் பொதுமக்கள் அதிகம் பயணிக்கும் சாலையாக உள்ளது.
விபத்து எச்சரிக்கை சந்திப்பான இப்பகுதியில், சாலை நடுவே உள்ள 'சிசிடிவி' கேமராவில், இரண்டு கேமராக்கள் பழுதாகி கீழே சரிந்துள்ளன. போக்குவரத்து கண்காணிப்பில் போலீசாருக்கு 'மூன்றாவது கண்'ணாக உதவும் கேமராக்கள் சரிந்துள்ளதால், விதிமீறலில் ஈடுபடுவோர் தப்பிக்கும் நிலைமை உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, கேமராக்களை சீரமைக்க முன்வர வேண்டும்.
- குமரேசன், வியாபாரி,
கதிர்வேடு.