/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; பள்ளி எதிரே தேங்கும் மழைநீர்
/
திருவள்ளூர்: புகார் பெட்டி; பள்ளி எதிரே தேங்கும் மழைநீர்
திருவள்ளூர்: புகார் பெட்டி; பள்ளி எதிரே தேங்கும் மழைநீர்
திருவள்ளூர்: புகார் பெட்டி; பள்ளி எதிரே தேங்கும் மழைநீர்
ADDED : அக் 26, 2024 01:40 AM

பள்ளி எதிரே தேங்கும் மழைநீர்
பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அத்திமாஞ்சேரிபேட்டை கிராமம் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையில், அரசு மகளிர் உயரநிலை பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், மகளிர் உயர்நிலை பள்ளி வழியாக மழைநீர் பாய்ந்து செல்கிறது. பள்ளி வளாகத்தில் இருந்து பாயும் மழைநீர், பள்ளி எதிரே சாலையில் மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது. இதனால், மாணவர்கள் சாலையோரம் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேடு பள்ளமாக அமைக்கப்பட்டுள்ள சாலையை நெடுங்சாலை துறையினர் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் .
--கே.கமலகண்ணன், அத்திமாஞ்சேரிபேட்டை.
உருக்குலைந்த மின்கம்பம் சீரமைக்க வேண்டும்
பேரம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் பேரம்பாக்கமத்தை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்கைளைச் சேர்ந்த பகுதிவாசிகள் புதிய மின் இணைப்பு, மின்கட்டணம் போன்ற பல பணிகளுக்கு சென்று வருகின்றனர்.
இதில் மின்வாரிய அலுவலம் செல்லும் சாலையோரம் உள்ள மின்கம்பம் ஒன்று சேதமடைந்து எலும்புக்கூடாக மாறியுள்ளது.
இதனால் இவ்வழியே செல்லும் பகுதிவாசிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.
-கே. குமார், கொண்டஞ்சேரி.