/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வரைவுப் பட்டியல்: பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு
/
வரைவுப் பட்டியல்: பொதுமக்கள் பார்வைக்கு வைப்பு
ADDED : செப் 09, 2011 02:07 AM
திருவள்ளூர் : உள்ளாட்சி தேர்தல்களுக்கான, ஓட்டுச் சாவடிகளின் வரைவுப் பட்டியல், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் கலெக்டர் ஆஷிஷ் சட்டர்ஜி வெளியிட்ட செய்திக் குறிப்பு: அக்டோபரில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வரைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இப்பட்டியல் கலெக்டர் அலுவலகம் (வளர்ச்சி பிரிவு), மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி அலுவலகங்களில், பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மறுப்புரை அல்லது கருத்துரை ஏதும் இருப்பின் 10ம் தேதிக்குள் எழுத்து மூலமாக தெரிவிக்கலாம்.