sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருவள்ளூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் 34.58 லட்சம்!: திருத்தம் மேற்கொள்ள 4 நாள் சிறப்பு முகாம்

/

திருவள்ளூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் 34.58 லட்சம்!: திருத்தம் மேற்கொள்ள 4 நாள் சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் 34.58 லட்சம்!: திருத்தம் மேற்கொள்ள 4 நாள் சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்ட மொத்த வாக்காளர்கள் 34.58 லட்சம்!: திருத்தம் மேற்கொள்ள 4 நாள் சிறப்பு முகாம்


UPDATED : அக் 30, 2024 02:51 AM

ADDED : அக் 30, 2024 01:27 AM

Google News

UPDATED : அக் 30, 2024 02:51 AM ADDED : அக் 30, 2024 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், நேற்று வெளியிடப்பட்டது. இதில், 3,699 ஓட்டுச் சாவடிகளில் 34,58,524 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Image 1338512


திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, பூந்தமல்லி, ஆவடி, அம்பத்துார், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் என, 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த தொகுதிகளில், 2015 ஜன., 2ஐ தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர், வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளில் 3,699 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. 10 தொகுதிகளிலும், ஆண்கள் - 17,05,287, பெண்கள்- 17,52,462, திருநங்கை - 775 என, மொத்தம் 34,58,524 பேர் உள்ளனர்.

இந்த வரைவு வாக்காளர் பட்டியல், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருவள்ளூர், பொன்னேரி மற்றும் திருத்தணி வருவாய் கோட்ட அலுவலகம், அம்பத்துார், திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

மேலும், மத்திய சென்னை வருவாய் கோட்ட அலுவலர், அனைத்து தாசில்தார் அலுவலகம் ஆவடி மாநகராட்சி மற்றும் திருவள்ளூர் நகராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும்.

மேலும், 3,699 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள 1,315 பள்ளிகளிலும், வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடமும் இப்பட்டியல் உள்ளது.

இங்கு வைக்கப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் - 2025ஐ, பொதுமக்கள் பார்வையிட்டு பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்ற விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும், 2025 ஜன., 1ல் 18 வயது நிறைவடைந்தவர்கள், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, படிவம் - 6, வெளிநாடு வாழ் இந்தியர்கள் படிவம் - 6யு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க படிவம் - 6டி, ஆட்சேபனை அல்லது பெயர் நீக்க படிவம் - 7, எழுத்து பிழை, முகவரி, தொகுதி மாற்றம் முதலியவற்றிற்கு படிவம் - 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து, ஓட்டுச்சாவடி மையங்களில், நேற்று துவங்கி நவ., 28 வரை வழங்கலாம்.

மேலும், சிறப்பு முகாம் நடைபெறும், நவ., 16, 17 மற்றும் நவ., 23, 24 ஆகிய நாட்களிலும் உரிய ஆவணங்களுடன் வழங்கலாம். மேலும், http://voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - தேர்தல், சத்யபிரசாத், தாசில்தார் சோமு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Image 1338564


10 சட்டசபை தொகுதிகளில் இடம்பெற்ற வாக்காளர் விபரம்

தொகுதி ஓட்டுச்சாவடி ஆண் பெண் திருநங்கை மொத்தம்

கும்மிடிப்பூண்டி 330 1,34,875 1,42,269 44 2,77,188

பொன்னேரி 313 1,28,101 1,34,547 32 2,62,680

திருத்தணி 330 1,36,046 1,40,093 31 27,61,70

திருவள்ளூர் 296 1,29,527 1,36,086 34 2,65,647

பூந்தமல்லி 397 1,85,613 1,93,718 76 3,79,407

ஆவடி 457 2,22,927 2,29,188 93 4,52,208

மதுரவாயல் 440 2,16,208 2,14,598 119 4,30,925

அம்பத்துார் 350 1,79,219 1,80,740 81 3,60,040

மாதவரம் 475 2,35,184 2,39,444 116 4,74,744

திருவொற்றியூர் 311 1,37,587 1,41,779 149 2,79,515

மொத்தம் 3699 17,05,287 17,52,462 775 34,58,524






      Dinamalar
      Follow us