/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திறப்பு
/
திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திறப்பு
திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திறப்பு
திருவள்ளூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் திறப்பு
ADDED : டிச 31, 2024 01:11 AM

திருவள்ளூர், திருவள்ளூரில் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.
தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் சார்பில் திருவள்ளுர் மின்பகிர்மான வட்டம் உருவாக்க, கடந்த ஆண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதில், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டத்தில் இருந்து, திருமழிசை கோட்டம், மற்றும் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டத்தில் இருந்து, திருவள்ளுர், திருத்தணி கோட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கப்பட்டன.
தற்போது, திருவள்ளுர், திருமழிசை, திருத்தணி ஆகிய கோட்டத்தை ஒருங்கிணைத்து திருவள்ளுர் மின்பகிர்மான புதிய வட்டமாக பிரிக்கப்பட்டது.
இதற்கான அலுவலகம் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகில் தனியார் கட்டடத்தில் தயார் செய்யப்பட்டது. பணிகள் முடிந்த நிலையில் திறப்பு விழா நேற்று நடந்தது.
கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, தேசிய மின் சிக்கன விழிப்புணர்வு வார விழாவினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது.
நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் திருவள்ளூர் ராஜேந்திரன், திருத்தணி சந்திரன், நகராட்சி தலைவர் உதயமலர், மேற்பார்வை பொறியாளர் சேகர், செயற் பொறியாளர் கனகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.