/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
18 பள்ளிகளுக்குஇலவச பொருட்கள்வழங்கும் விழா
/
18 பள்ளிகளுக்குஇலவச பொருட்கள்வழங்கும் விழா
ADDED : செப் 14, 2011 02:57 AM
திருத்தணி:திருத்தணி ஜி.ஆர்.டி., கல்வி குழுமம் சார்பில், 18 பள்ளிகளுக்கு
10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலவச பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜி.ஆர்.டி., கல்வி
குழுமத்தில் இயங்கி வரும் மகாலட்சுமி கல்வி அறக்கட்டளை சார்பில், 18
பள்ளிகளை தத்தெடுத்து 10 லட்சம் ரூபாய் மதிப்பில் மாணவர்களுக்கு சீருடை,
பேனா, நோட்டுப் புத்தகங்கள், மேஜை, நாற்காலி உட்பட 19 வகையான இலவச
பொருட்கள் வழங்கும் விழா கல்வி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு முதல்வர்
டாக்டர் பழனிச்சாமி தலைமை வகித்தார். துணை பொது மேலாளர் முகில் வரவேற்றார்.
ஆலோசகர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.
தாசில்தார் ஜெயா, ஊராட்சித்
தலைவர்கள் ராஜசேகர், ரத்தினம், லட்சுமி ஆகியோர் வாழ்த்துரை
வழங்கினர்.பி.கே.ஆர்., பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பழனிச்சாமி
கலந்து கொண்டு 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை வழங்கி பேசினார்.
வரும் காலங்களில், மேலும், கூடுதல் பள்ளிகளை தத்தெடுத்து நலத்திட்ட உதவிகள்
வழங்குவதாகவும் அவர் கூறினார்.நிகழ்ச்சியில் கூடுதல் தொடக்க கல்வி
அலுவலர் கதிரவன் மற்றும் 18 பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து
கொண்டனர். நிர்வாக அலுவலர் பிரபு நன்றி கூறினார்.