sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சூடுபிடிக்க துவங்கியுள்ள உள்ளாட்சித் தேர்தல் கோஷ்டிப் பூசலில் சிக்கியுள்ள முக்கிய கட்சிகள்

/

சூடுபிடிக்க துவங்கியுள்ள உள்ளாட்சித் தேர்தல் கோஷ்டிப் பூசலில் சிக்கியுள்ள முக்கிய கட்சிகள்

சூடுபிடிக்க துவங்கியுள்ள உள்ளாட்சித் தேர்தல் கோஷ்டிப் பூசலில் சிக்கியுள்ள முக்கிய கட்சிகள்

சூடுபிடிக்க துவங்கியுள்ள உள்ளாட்சித் தேர்தல் கோஷ்டிப் பூசலில் சிக்கியுள்ள முக்கிய கட்சிகள்


ADDED : செப் 16, 2011 03:43 AM

Google News

ADDED : செப் 16, 2011 03:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலையொட்டி, முக்கிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், தங்களின் மேல்மட்டத் தலைவர்களின் ஆதரவிற்காக அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பின் தொடர்ந்து செல்லும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.சட்டசபை தேர்தல் பரபரப்பு முடிவதற்குள், அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ், பா.ஜ., உள்ளிட்டக் கட்சிகள் தொண்டர்களிடம் இருந்து, விருப்ப மனு பெற்று வருகின்றன. இதில் அ.தி.மு.க., சார்பில் விருப்ப மனு பெறுவது முடிந்து விட்டது. தி.மு.க., இன்று (16ம் தேதி), தே.மு.தி.க., வரும் 18ம் தேதி வரையும் மனு பெற கடைசி நாள் என அறிவித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, ஆரணி ஆகிய பேரூராட்சிகள், எல்லாபுரம், பூண்டி ஒன்றியங்களில் உள்ள முக்கிய பிரமுகர்கள், மாவட்ட கவுன்சிலர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு மெம்பர் ஆகிய பதவிகளுக்கு அதிகளவில் போட்டி போட்டுக் கொண்டு, தலைமையிடம் மனு கொடுத்துள்ளனர்.

சில இடங்களில் முக்கிய பிரமுகரின் அதிகாரப் போக்கால், அதிருப்தி அடைந்து, எதிர்கோஷ்டிகள் உருவாகி, அவர்கள் சார்பிலும் அதிகளவு பிரமுகர்கள் மனு கொடுத்துள்ளதாக தெரிகிறது.தி.மு.க., சார்பில் ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சிகளில் ஏற்கனவே போட்டியிட்டு ஜெயித்தவர்கள், பெயரவில் தங்களது தலைமையிடம் மனு செய்துள்ளதாக தெரிகிறது.பணம் உள்ளவர்களை தேடி, அவர்களை மனு செய்யவும் வற்புறுத்தியுள்ளதாக, தொண்டர்களிடையே பேச்சு எழுந்துள்ளது. முன்னாள் மாவட்டச் செயலர்கள் பெயரில் கோஷ்டியில் உள்ளவர்கள் தங்களது திறமையை காட்ட செயலில் ஈடுபட்டுள்ளனர்.தே.மு.தி.க., சார்பில், இளைஞர்களிடையே எழுச்சி ஏற்பட்டு, அதிகளவில் மனு செய்துள்ளதாக தெரிகிறது. ஒன்றியம், பேரூராட்சி பகுதிகளில் முக்கிய பிரமுகர்கள், தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் பேசி 'தாஜா' செய்யும் வேலையிலும் ஈடுபட்டுள்ளனர்.தேர்தல் அறிவிக்காத நிலையில், ஓரளவு சூடுபிடிக்கத் துவங்கியுள்ள உள்ளாட்சித் தேர்தல் களம், தேர்தல் தேதி அறிவித்து கூட்டணி முடிவான பின்னர் சூடுபிடிக்கத் துவங்கும்.






      Dinamalar
      Follow us