/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் மழைநீர்மெத்தனப் போக்கில் நெடுஞ்சாலைத் துறை
/
செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் மழைநீர்மெத்தனப் போக்கில் நெடுஞ்சாலைத் துறை
செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் மழைநீர்மெத்தனப் போக்கில் நெடுஞ்சாலைத் துறை
செல்ல வழியின்றி தேங்கி நிற்கும் மழைநீர்மெத்தனப் போக்கில் நெடுஞ்சாலைத் துறை
ADDED : செப் 16, 2011 03:44 AM
ஊத்துக்கோட்டை:சாலையோரங்களில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயை ஒட்டி,
கிராவல் கொட்டி மேடாக்கியுள்ளதால், மழைநீர் செல்ல வழியின்றி, குளம் போல்
தேங்கி நிற்பதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.சென்னை - திருப்பதி மாநில
நெடுஞ்சாலையில் (எஸ்.எச்.51) அமைந்துள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி.
இப்பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன், கழிவுநீர் செல்ல சாலையின்
இருபுறங்களிலும் கால்வாய்கள் அமைக்கப்பட்டன. ஐந்து அடிக்கு அதிகமான ஆழம்
அமைத்து, திறந்த வெளியில் கால்வாய் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் முறையாக
பராமரிக்கப்பட்டு, பின் முறையான பராமரிப்பு செய்யப்படவில்லை.சாலையோரங்களில்
கடை வைத்திருப்பவர்கள், கால்வாய் மேல் பெரிய அளவில் கற்கள் அமைத்து,
கிராவல் கொட்டி மேடாக்கி உள்ளனர்.
மழைக்காலங்களில், மழைநீர் செல்ல
வழியின்றி, சாலையில் குளம்போல் தேங்கி விடுகிறது. இதனால் தேங்கி நிற்கும்
மழைநீர் மீது, வாகனங்கள் செல்லும்போது, பாதசாரிகள் மீது தண்ணீர்
விழுகிறது.இதுகுறித்து கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரியிடம்
கேட்டதற்கு, 'அடுத்த சில தினங்களில் சாலையோரம் உள்ள மண்மேடுகள்
அகற்றப்பட்டு, மழைநீர் செல்ல வழி ஏற்படுத்தப்படும்' என்றார். ஆனால் நாட்கள்
தான் ஓடியதே தவிர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது,
அப்பகுதி மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.