/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மக்கள் நலத்திட்ட பணிகளை தேர்தலுக்குள் விரைந்து முடிக்க 'திசா' தலைவர் அறிவுரை
/
மக்கள் நலத்திட்ட பணிகளை தேர்தலுக்குள் விரைந்து முடிக்க 'திசா' தலைவர் அறிவுரை
மக்கள் நலத்திட்ட பணிகளை தேர்தலுக்குள் விரைந்து முடிக்க 'திசா' தலைவர் அறிவுரை
மக்கள் நலத்திட்ட பணிகளை தேர்தலுக்குள் விரைந்து முடிக்க 'திசா' தலைவர் அறிவுரை
ADDED : டிச 31, 2025 03:50 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை, தேர்தலுக்கு முன் நிறைவேற்ற வேண்டும் என, 'திசா' குழு தலைவர் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், காங்., - எம்.பி., சசிகாந்த் செந்தில் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் பிரதாப் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மத்திய - மாநில அரசின் திட்டங்கள், நடப்பு நிலவரம், வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது.
பின், திருவள்ளூர் எம்.பி., சசிகாந்த் செந்தில் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோரிக்கைகள், மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் கேட்கப்பட்டு, அவற்றிற்கு பதில்களும் உரிய முறையில் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் வளர்ச்சி பணிகளில் சிறப்பாக செயல்படுகிறது.
மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவித அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும், சுகாதாரம், கல்வி போன்றவைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நீண்ட நாள் கோரிக்கைகளான, பல்வேறு ரயில்வே மேம்பாலம் பணிகளும், பிரதான சாலை பணிகளும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
ஏரிகளில் கழிவுநீர் கலக்காத வகையில், குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். குடிநீர் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை தேர்வாய்கண்டிகை, காட்டூர், நேமம் போன்ற பல்வேறு திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் தேர்தல் நெருங்கும் முன், உரிய காலத்தில் முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் முனைப்புடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

