UPDATED : மே 06, 2025 09:35 AM
ADDED : மே 05, 2025 11:40 PM
ஆன்மிகம்
சித்திரை பிரம்மோத்சவம்
வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், சித்திரை பிரம்மோத்சவம் ஐந்தாவது நாள், நாச்சியார் திருக்கோலம், காலை 4:00 மணி. ஸ்ரீராம நவமி, திருமஞ்சனம், காலை 10:30 மணி, பக்தி உலா, மாலை 5:30 மணி, யாளி வாகனம் புறப்பாடு, இரவு 7:00 மணி.
ராகுகால பூஜை
சிவவிஷ்ணு கோவில், பூங்கா நகர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:30 மணி.
மகா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
வெற்றி விநாயகர் கோவில், ஆயில் மில், திருவள்ளூர், கனகதுர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், மாலை 3:00 மணி.
செல்வ விநாயகர் கோவில், என்.ஜி.ஓ., காலனி, திருவள்ளூர், அபிஷேகம், மாலை 3:00 மணி.
அபிஷேகம்
லலிதாம்பிகை சமேத அக்னீஸ்வரர் கோவில், பூண்டி அடுத்த நெய்வேலி கிராமம், சுப்ரமணியருக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி.
நித்ய பூஜை
ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி,நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஆரத்தி
ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
சித்திரை பெருவிழா
திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திரிபுராந்தக சுவாமி கோவில், கூவம். சித்திரை பெருவிழா சந்திரசேகர் பவழக்கால் சப்பரம், காலை 7:00 மணி, யானை வாகனம், இரவு 8:00 மணி.
தீமிதி விழா
திரவுபதியம்மன் கோவில், பழைய தர்மராஜா கோவில் தெரு, திருத்தணி, மூலவருக்கு சந்தன காப்பு, காலை 8:00 மணி, மகாபாரத சொற்பொழிவில் நெல்லிக்கனி நச்சுப்பொய்கை, மதியம் 1:30 முதல் மாலை 5:30 மணி வரை, மகாபாரத நாடகத்தில் மணிமாலன் சண்டை, இரவு 11:00 மணி.
பிரம்மோத்சவம்
முருகன் கோவில், திருத்தணி, சித்திரை மாத பிரம்மோத்சவம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாலை 5:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, உற்சவர் முருகர் புலி வாகனத்தில் தேர்வீதியில் உலா, மாலை 4:30 மணி, உற்சவர் முருகர் யானை வாகனத்தில் உலா, இரவு 7:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
லட்சுமிநரசிம்மாசுவாமி கோவில், ம.பொ.சி.சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 5:00 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 4:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி.
காமாட்சி சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.
மண்டலாபிஷேகம்
பத்மாவதி அம்மன் சமேத சீனிவாச பெருமாள் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி, சிறப்பு ஹோமம், காலை 8:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 9:00 மணி.
ஸ்ரீதேவி, பூதேவி சமேத சத்யநாராயண பெருமாள் கோவில், கிருஷ்ணசமுத்திரம் காலனி, சிறப்பு ஹோமம், காலை 7:30 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.
சுகந்த குந்தலாம்பாள் சமேத விபூதீஸ்வரர் கோவில், வெண்மனம்புதுார், கடம்பத்துார்.
மண்டலாபிஷேகம், மாலை 6:00 மணி.
வலம்புரி விநாயகர் கோவில், குமரன் நகர், மணவாளநகர். காலை 7:30 மணி.
கூலியம்மன் கோவில், சிவதண்டலம், கடம்பத்தூர், காலை 7:00 மணி.