ஆன்மிகம் தெப்ப உத்சவம் வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி. மாசி தெப்ப உத்சவம் இரண்டாவது நாள், உற்சவர் வீரராகவ பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளல், மாலை 6:30 மணி, தெப்பம் புறப்பாடு, இரவு 7:00 மணி.
நித்ய பூஜை ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிஷேகம், மதியம் 12:30 மணி.
ஜெகந்நாத பெருமாள் கோவில், திருமழிசை. திருவாராதனம், காலசந்தி பூஜை, காலை 8:00 மணி. புஷ்ப புறப்பாடு, மாலை 6:00 மணி. திருவாராதனம், இரவு 7:30 மணி.
ஆரத்தி ஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.
பிரம்மோற்சவம் அங்காள பரமேஸ்வரி கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, மாயனச்சூறை பிரம்மோத்சவத்தை ஒட்டி, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, உற்சவர் அம்மன் புலி வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி.
சிறப்பு பூஜை முருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.
கோட்டா ஆறுமுக சுவாமி கோவில், நந்தியாற்றின் கரையோரம், திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.
தணிகாசலம்மன் கோவில், அக்கைய்ய நாயுடு சாலை, திருத்தணி, சிறப்பு பூஜை, காலை 6:00 மணி.
வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.
காமாட்சி அம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோவில், நாபளூர், திருவாலங்காடு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, வண்ணமலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை, மாலை 6:00 மணி.

