/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கட்டாய கல்வி சட்ட ஒதுக்கீடு சான்று தர இன்று கடைசி நாள்
/
கட்டாய கல்வி சட்ட ஒதுக்கீடு சான்று தர இன்று கடைசி நாள்
கட்டாய கல்வி சட்ட ஒதுக்கீடு சான்று தர இன்று கடைசி நாள்
கட்டாய கல்வி சட்ட ஒதுக்கீடு சான்று தர இன்று கடைசி நாள்
ADDED : அக் 08, 2025 08:30 PM
திருவள்ளூர்:இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்கீழ் பயன்பெற, எல்.கே.ஜி., சேர்ந்துள்ள மாணவர்களின் பெற்றோர், உரிய சான்றிதழ்களை பள்ளிகளில் இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை, சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில், நடப்பு 2025 - -2026ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
செப்., 30ம் தேதி நிலவரப்படி, எல்.கே.ஜி., சேர்க்கை செய்யப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர், ஆர்.டி.இ.,யில் 25 சதவீத இடஒதுக்கீடு பெற, உரிய சான்றிதழ் மற்றும் உறுதிமொழி படிவத்தை, அந்தந்த பள்ளி முதல்வரிடம், இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டின்படி தகுதியுடைய மாணவர்களின் இறுதி பட்டியல், வரும் 14ம் தேதி அந்தந்த பள்ளி தகவல் பலகையில் ஒட்டப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.