UPDATED : ஏப் 29, 2026 05:13 PM
ADDED : ஏப் 29, 2026 05:10 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் ஏப்ரல் 30, பகாசூரன் கும்பம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆர்.கே.பேட்டை திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் முதல் உத்சவமான பகாசூரன் கும்பம் படைக்கும் நிகழ்ச்சி, இன்று இரவு நடைபெற உள்ளது. இதையொட்டி, மாட்டு வண்டியில் வீதியுலா வரும் பகாசூரனுக்கு, வீடுதோறும் கும்பம் படைக்கப்பட உள்ளது.
அதை தொடர்ந்து, இரவு 10:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தெருக்கூத்து நாடகம் நடைபெறும். வரும் 3ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அன்று மாலை தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.
