/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு
/
நாளை முதல் சுங்க கட்டணம் உயர்வு
ADDED : மார் 31, 2025 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -
தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், வாகனங்களுக்கான சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, நாளை முதல் திருத்திய புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.
அந்த வகையில், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பட்டரைபெரும்புதூர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலை, தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடி மற்றும் தாம்பரம் -- புழல் நெடுஞ்சாலை, சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில், உயர்த்தப்பட்ட சுங்க கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்படுகிறது.
இந்த கட்டண நடைமுறை, 2026, மார்ச் 31ம் தேதி வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.