/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணியர்
/
பழவேற்காடு கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணியர்
ADDED : ஜன 02, 2026 05:32 AM

பழவேற்காடு: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பழவேற்காடு கடற்கரையில் சுற்றுலா பயணியர் குவிந்து, ஜாலியாக பொழுதை கழித்தனர்.
பழவேற்காடு மீனவப்பகுதியானது வங்காள விரிகுடா கடல்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இங்குள்ள அழகிய கடற்கரை அழகை ரசிக்கவும், குளித்து விளையாடவும் விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று காலை முதல், கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணியர் குடும்பம் குடும்பமாக குவிந்தனர்.
கடற்கரையில் அமர்ந்து, கொண்டு வந்திருந்த உணவுகளை சாப்பிட்டபடி, கடல் அழகை ரசித்தனர். இளைஞர்கள், கடற்கரையில் ஓடியாடி விளையாடினர். குழந்தைகள் கடல் அலையில் நின்று ஜாலியாக பொழுதை கழித்தனர். இளைஞர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணியரின் வருகையால், பழவேற்காடு பஜார் பகுதியில் தேநீர் மற்றும் உணவகங்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
படகு சவாரிக்கு போலீசார் தடை விதித்து, மீனவ கிராமங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தனர். அதை மீனவ கிராமத்தினர் பின்பற்றினர். மீன்பிடி தொழிலுக்கு செல்வதையும் தவிர்த்திருந்தனர்.
திருப்பாலைவனம் போலீசார் மற்றும் கடலோர காவல்படை யினர் தீவிர கண்காணிப்பில் ஈ டுபட்டனர்.

