ADDED : நவ 09, 2024 09:40 PM
அ நிறம் | அளவு
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த பாலாபுரம் ஓடையில் மணல் கடத்தப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு, மணல் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த டிராக்டரை மறித்தனர்.
டிராக்டர் ஓட்டுனர், டிராக்டரில் இருந்து குதித்து தப்பியோடினார். டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.
