ADDED : பிப் 03, 2025 02:16 AM

திருத்தணி:திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து, நேற்று மாலை, திருவள்ளூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று, 30க்கும் மேற்பட்ட பயணியரை ஏற்றிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்தது.
இந்த பேருந்து, திருத்தணி பைபாஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்து, சில பயணியரை ஏற்றிக் கொண்டு புதிய சென்னை சாலையில் சென்றது. அப்போது, பின்னால், பிளக்ஸ் பேனர்கள் ஏற்றி வந்த, 'டிராக்டர்', பேருந்தை முந்தி சென்றது. அப்போது, பேருந்தின் முன்பக்க கண்ணாடியில், டிராக்டர் மோதியது.
இதில், கண்ணாடி முழுதும் உடைந்ததில், பேருந்தில் பயணம் ஒரு பயணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதிர்ஷ்டவசமாக மீதமுள்ள பயணியர் காயமின்றி தப்பினர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

