ADDED : டிச 08, 2025 06:21 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: டிராக்டர் கவிழ்ந்து ஓட்டுநர் பலியானார்.
திருத்தணி அடுத்த நெமிலி மேட்டுக் காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 40. விவசாயி.
இவர் நேற்று காலை தன் வயல்வெளியில் டிராக்டர் மூலம் உழவு பணி மேற்கொண்டார்.
அப்போது, திடீரென டிராக்டர், கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் டிராக்டர் அடியில் சிக்கி கோவிந்தசாமி உடல் நசுங்கி இறந்தார். கனகம்மாசத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
