ADDED : டிச 15, 2025 04:17 AM
அ நிறம் | அளவு
திருத்தணி: திருத்தணி பகுதிகளில் செல்லும் ஆறு மற்றும் ஏரிகளில், அனுமதியின்றி மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.பி., விவேகானந்த சுக்லா உத்தரவின்படி, திருத்தணி போலீசார் தெக்களூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தெக்களூர் ஏரியில் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது அனைவரும் தப்பிச் சென்றனர். பின், பதிவெண் இல்லாத டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும், ஓட்டுநர் பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த முரளி, 35, என்பவரை தேடி வருகின்றனர்.
