ADDED : மார் 09, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
ஊத்துக்கோட்டை: மணல் கடத்தி வந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்தனர்.
பென்னலுார்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூனிப்பாளையம் பகுதியில் மணல் கடத்தல் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியே வந்த டிராக்டரை போலீசார் சோதனை செய்ததில், திருட்டு மணல் இருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, பூண்டி கிராமத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான பொன்னுசாமி, 56, என்பவரை கைது செய்த போலீசார், ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
